மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சர்வம் சிவமயம் - நாட்டிய நிகழ்ச்சி

ஸ்ரீ பாதம் அகாடமி ஆப் டான்ஸ் பள்ளியின் நாட்டிய  நிகழ்ச்சி 10/7/2016

News image
Updated On :7 ஜூலை 2016, 7:23 am

பிரபல நடனக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் அவர்களின் ஸ்ரீ பாதம் அகாடமி ஆப் டான்ஸ் பள்ளியின் நாட்டிய  நிகழ்ச்சி 10/7/2016 அன்று சென்னை தி.நகர். கிருஷ்ண கானசபாவில் நடைபெற இருக்கிறது.நடனப் பள்ளியின் இயக்குனர் குரு ஸ்ரீமதி லக்ஷ்மி வெங்கடேஷ்  அவர்களிடம் பயிற்சி பெற்ற திறமையான மாணவிகள் குழு இந்த நாட்டிய நிகழ்ச்சியை வழங்க இருக்கிறது.

சர்வம் சிவமயம் எனும் இந்த நாட்டிய நிகழ்வின் அடிப்படை  அடவுகள் மற்றும் முத்திரைகளால் சிவனது தெய்வீக தோற்றப்பொலிவை விவரித்து சிவ தரிசனம் இந்த பிரபஞ்சம் முழுவதும் அனைத்து ரூபங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பதாக  உணர செய்வதே ஆகும் என  அழைப்பிதழ் தெரிவிக்கிறது .

சிவ பெருமானின் பஞ்சபூத  திருத்தலங்களில் ஆகாயத்தலமாக போற்றப் படுவது சிதம்பரம் நடராஜர் திருத்தலம் .நாட்டிய நிகழ்வின் முதல் பாதி சிவ மங்கலாஸ்தகம் மற்றும் சிவ பஞ்ச முக ஸ்துதியில் தொடங்கி  குனித்த புருவமும்  கொவ்வை செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்து  நீண்டு சுழன்றாடும் சடை முடியும் ஜடாமுடியில் பிரவகித்து வழிந்தோடும் கங்கா தேவியுமாக சிவனின் தேஜோமய தோற்றப் பொலிவு தஞ்சாவூர் சங்கர அய்யரின் லதாங்கி வர்ணத்தில் அமைந்த கீர்த்தனையோடு முடிவுகிறது .

இரண்டாம் பாதி நந்தனார் கதை நந்தனார் கதை தமிழ் கலை  இலக்கிய உலகில் திரைப்படமாக புதினமாக நாட்டுப்புறப் பாடல்களாக பலரால் பல விதமாக மறு ஆக்கம் செய்யப் பட்டிருந்தாலும் கோபால கிருஷ்ண பாரதியாரின் பாடல் வழியாக நாட்டிய அடவுகளில் நாம் நந்தனாரைக் காண்பது இதம்.

சிவ ஸ்துதியில் தொடங்கி நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் கதையோடு நிகழ்ச்சி முடிவடைகிறது .

சர்வம் சிவமயம்

கீர்த்தனை மற்றும் நந்தனார் கதை வழியாக சிவ தரிசனம் பெறச் செய்வதே இந்த நாட்டிய நிகழ்வின் முக்கிய நோக்கம் என குரு .ஸ்ரீமதி .லக்ஷ்மி வெங்கடேஷின் அழைப்பிதழ் தெரிவிக்கிறது. நாட்டியபிரியர்கள் நாட்டியமாணவிகள்இ ஆர்வம் இருப்போர் அனைவரும் கலந்து கொள்ளலாம் .

நாள்- 10/7/16

இடம்-தி.நகர் கிருஷ்ண கான சபா,சென்னை

அடுத்ததாக இதே நாட்டிய நிகழ்ச்சி சிதம்பரம் நடராஜர் சன்னதியிலும் நடைபெற இருக்கிறது;

நாள்- 17/7/16

இடம்-தில்லை நடராஜர் ஆலயம் ,சிதம்பரம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.