லேட்டஸ்ட் வெட்டிங் லெஹங்கா ஸ்பெஷல்!
மும்பை மற்றும் டெல்லியின் புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் டிசைனர்களான மனிஷ் மல்ஹோத்ரா, தருண் தகிலியானி, அனிதா டோங்கரி, நிகில் தம்பி, போன்றோர் வடிவமைத்த புத்தம் புதிய கலெக்சன்களை அணிந்து வந்து


வீட்டில் திருமணமா? முதல் வேலையாக நாம் எல்லோரும் திட்டமிடத் தொடங்குவது உடைகளுக்காகத் தான். மணமகன், மணமகள் மட்டுமல்ல இரு வீட்டு அம்மா, அப்பாக்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், அவர்களது வாரிசுகள், நெருங்கிய உறவினர்கள் என்று தொடங்கி நெருங்கிய நண்பர்கள் வரை எல்லோருக்குள்ளும் சந்தோஷக் கற்பனைகளை விரியச் செய்வது உடைகளாகத் தான் இருக்கும். திருமண வைபவத்தன்று கலந்து கொள்ளும் அனைவரது உடைகளுமே அத்தனை ஸ்பெஷல்.
எல்லா நாட்களையும் போல ஏனோ...தானோ என்று அன்றைக்கு யாரும் கவனமில்லாது ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. இன்டர்நெட், வைபை என்று உலகம் சுருங்கி நமது சுட்டு விரல் நுனியின் கீழ் வந்து விட்டதால் திருமணத்திற்கு பாரம்பரியமான பெரிய ஜவுளிக்கடைகளைத் தேடிப்போய் ஆடைகளைத் தேர்வு செய்த காலமெல்லாம் போயே போச்சு. கூகுளில் தேடினால் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களின் ஆன்லைன் விற்பனை அங்காடிகள் கண்ணுக்கு குளிர்ச்சியாக கணக்கற்ற கலெக்சன்களை அள்ளி வீசுகின்றன. எல்லா பிரிவு மக்களிடையேயும் பிரத்யேக ஆடை வடிவமைப்பாளர்களின் ஆடைகளுக்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.
அதையொட்டி கடந்த வாரம் மும்பையில் 'இந்திய ஆடை வடிவமைப்பாளர்கள் வாரம் 2016' என்ற பெயரில் இந்தியாவின் பிரபல ஆடை நிபுணர்களின் வடிவமைப்பில் உருவான பிரத்யேக திருமண உடைகளுக்கான அறிமுகவிழா கொண்டாடப்பட்டது. இதற்கான ஃபேஷன் அணிவகுப்பில் பிரபல நடிகைகள் மற்றும் மாடல்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு வலம் வந்தனர்.
முன்பெல்லாம் பெண்களுக்கு திருமணமென்றால் அம்மாக்களின் கவலை மகள்களின் கழுத்து எலும்பில் வந்து நிற்கும். ’பார் திருமணத்திற்காக இப்படியா மெலிந்து போவாய், கழுத்து எலும்பெல்லாம் துருத்திக் கொண்டு இருப்பதால் எத்தனை அழகாக ஜாக்கெட் தைத்தாலும் பார்க்க அம்சமாகவே இல்லை’ என்று குறைபட்டுக் கொள்வார்கள். அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! இப்போதைய புது டிரெண்ட் என்ன தெரியுமா? தைரியமாக கழுத்து எலும்பை வெளியில் காட்டிக் கொள்ளலாம், அது கூட ஒருவகையில் அழகே! என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட புத்தம் புதிய திருமண உடைகள். அந்த விழாவில் அணிந்து வரப்பட்ட பெரும்பாலான உடைகள் கழுத்து எலும்பு வெளித்தெரியும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தன. நிகழ்ச்சியில் மும்பை மற்றும் டெல்லியின் புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் டிசைனர்களான மனிஷ் மல்ஹோத்ரா, தருண் தகிலியானி, அனிதா டோங்கரி, நிகில் தம்பி, போன்றோர் வடிவமைத்த புத்தம் புதிய கலெக்சன்களை அணிந்து வந்து மாடல்கள் ஃபேஷன் அணிவகுப்பை வண்ண மயமாக்கினார்.

மனிஷ் மல்ஹோத்ராவின் 'பெர்சியன் கனெக்ட்' எனும் உடையை அணிந்து வந்த தீபிகா படுகோன் அனைவரது கவனத்தையும் கொள்ளை கொண்டார். மெரூன் நிறத்தில் தாமிர நிற ஜரிகை வேலைப்பாட்டுடன் கூடிய இந்த லெஹங்கா அழகோ அழகு! கழுத்து எலும்புகள் மட்டுமல்ல அகலமான வழ வழப்பான தோள்களும் வெளித்தெரியும் வகையில் இந்த ஆடை வடிவமைப்பட்டிருந்தது, இந்த ஆடையை வடிவமைக்க மனிஷ் பெர்சியன் கலை அம்சங்களை பயன்படுத்தி இருப்பது உடைக்கு வெகு பாந்தம்! ஆனால் இதன் விலையைப் பார்த்து தயவு செய்து மூர்ச்சை ஆகி விடாதீர்கள்! அப்படியொன்றும் அதிகமில்லை சுமார் ரூ.5.30 லட்சத்தில் இருந்து தொடங்குகிறதாம்! வாங்கி அணிந்து கொள்ளத் திறனுடையவர்கள் புது டெல்லியில் இருக்கும் மனிஷ் மல்ஹோத்ரா ஸ்டோர்ஸில் இந்த ஆடையை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். தொடர்புக்கு -09818684859.

இது டெல்லியைச் சேர்ந்த மற்றொரு பிரபல ஆடை வடிவமைப்பாளர் கவுரவ் குப்தா வடிவமைத்த ’சாம்பெயின் கோடேட் லெஹங்கா’. ஆழமான 'வி' வடிவக் கழுத்துடன் விரியும் இந்த உடையின் சிறப்பு அதன் ஆர்கன்ஸா பள்ளு (முந்தானை). இந்த உடையின் இன்னொரு சிறப்பு அணியும் போது அதிகமாக நகைகள் தேவைப்படாது. சுத்தமாக நகைகள் அணியாவிட்டால் கூட நகைகளற்ற குறையை இந்த உடையுடன் கூடிய உங்களது சிறுபுன்னகை நிவர்த்தி செய்து விடும். இதன்இ விலை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. ஆடையை வாங்கும் ஆர்வம் இருப்பவர்கள் தொடர்புக்கு gauravguptastudio.com எனும் இணையதளத்தை அணுகலாம்.

இந்த ராயல் மெரூன் உடை மும்பையைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் நிகில் தம்பியின் சமீபத்திய அறிமுகம். மெரூன் நிறத்தில் தங்க நிற ஜரிகைப் பூக்கள் மின்னும் இந்த ஸ்கர்ட் வெகு அழகு! இந்த உடைக்கான துப்பட்டா தூக்கலாகத் தெரியும் வண்ணம்தங்க நிற பிளைன் நெட் என்பதால் இதற்குப் பொருத்தமாக இதன் சட்டைப் பகுதியில் மெரூன் நிறத்தில் நீளமான கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வகையான உடைகளை அணியும் போது நீளக்கைகள் மறைப்பதால் அதிகமான வளையல்கள் அணியாத தேவை இருக்காது. இதன் விலை ரூ.70,000 லிருந்து தொடங்குகிறது. இதை ஆர்டர் செய்ய perniaspopupshop.com எனும் இணையதளத்தை அணுகலாம்.

டெல்லியைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் மணவ் கங்வானியின் சமீபத்திய அறிமுக ஆடையான இந்த ஆனியன் பிங்க் லெஹங்காவைப் பாருங்கள். இதை திருமணத்திற்கு மட்டுமல்ல பிறந்த நாள் வைபவங்களில் அணியலாம். ஆடையின் வட்டக் கழுத்துப் பகுதி மற்றும் நீளமான ஸ்கர்ட்டின் கீழ்பகுதியைச் சுற்றிலும் பதிக்கப்பட்டுள்ள கிரிஸ்டல் கற்கள் ஆடையின் அழகை மேலும்அதிகப் படுத்துகின்றன. இதன் விலை ரூ.1,20,000 இதை ஆர்டரில் பெற perniaspopupshop.com எனும் இணையதளத்தை அணுகலாம்.
.jpg)
அடுத்ததாக அனிதா டோங்கிரியின் இந்த சிவப்பு நிற திருமண லெஹங்காவைப் பாருங்கள். கழுத்தை சுற்றி பதிக்கப்பட்டுள்ள தங்க நிற வின்டேஜ் ஜம்க்கிகள் இதன் சிறப்பு, அதோடு கிரிஸ்டல் மற்றும் தங்க ஜரிகை வேலைப்பாட்டுடன் கூடிய சிவப்பு ஜார்ஜெட் துப்பட்டா உடைக்கு மிகப் பொருத்தம் .இந்த உடையில் கோட்டா பட்டி எம்பிராய்டரி அதிகம் பயன்படுத்தப்பட்டிருப்பது உடையை பிரமாண்டமாக உணரச் செய்கிறது. இதன் விலை ரூ.2 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதைப் பெற eshop@anitadongre.com எனும் இணைய முகவரியை அணுகலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...