திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

சுறு சுறு சுக்கு காப்பி சாப்பிடலாமா?

சுக்கு காப்பியோ டீயோ எதுவானாலும் இரண்டுமே மழைக்காலங்களுக்கு ஏற்ற அருமையான இணைகள்.

News image
Updated On :15 ஆகஸ்ட் 2016, 12:31 pm

சுக்கு காப்பிப் பொடி 'ராஜம் சுக்கு காப்பித் தூள்'  என்ற பெயரில் இப்போது  கடைகளில் கிடைக்கிறது. ஆனால் அந்தப் பாக்கெட்டுகள் சீக்கிரம் தீர்ந்து விடுகின்றன. இதை ஏன்  வீட்டிலேயே எளிதாக செய்து வைத்துக் கொள்ளக் கூடாது என்று தோன்றியதால் பாட்டியிடம் கேட்டு கற்றுக் கொண்ட பாரம்பரிய ரெசிப்பி இது.

Story image

தேவையான பொருட்கள்:

சுக்கு- 2 துண்டு

மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

தனியா - 5 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் - 3 அல்லது 4 (விருப்பமிருந்தால்)

செய்முறை:

மேலே சொல்லப்பட்ட பொருட்களை சொன்ன அளவுகளில் எடுத்துக் கொண்டு வெறும் வாணலியில் சிறிது நேரம் வறுக்கவும். தனியா லேசாக நிறம் மாற ஆரம்பிக்கும் போது வாணலியை இறக்கி பொருட்களை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும். ஆறியதும்  மிக்சியில்  இட்டு கொர கொரப்பாக அரைத்து எடுத்து மீண்டும் பொடியை ஆற வைக்கவும், ஆற வைத்த பொடியை  காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பா அல்லது கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது  பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பொடியை வைத்து பால் சேர்க்காமல் வெல்லம் கலந்த  சுக்கு காப்பி  போடலாம் அல்லது டீத்தூளுடன் கலந்து கொதிக்க வைத்து பால் சேர்த்து சுக்கு டீயும் போடலாம். எப்படி பயன்படுத்தினாலும் அதன் பலன் மாறாது.

பாரம்பரிய சுக்கு காப்பி தயாரிக்கும் முறை:

Story image

தேவையான பொருட்கள்:

சுக்கு காப்பி பொடி - 2 டீஸ்பூன்

பனை வெல்லம் -  ஒரு அச்சில் பாதி

தண்ணீர் - 5 சிறிய  கப்

செய்முறை:

தண்ணீரில் சுக்கு காப்பித் தூளை போட்டு நன்கு கொதிக்க விடவும்.  நன்றாகக் கொதித்து மணம் வந்தவுடன் இறக்கி வடிகட்டி பனை வெல்லத்தை தூளாக்கி அதனுடன் கலக்கவும். பனை வெள்ளத்தில் தூசு,துரும்புகள் இருக்கலாம். எனவே மீண்டும் ஒரு முறை  வடிகட்டியபின் சூடாகப் பருகலாம்.

பலன்:

சுக்கு காப்பியோ டீயோ எதுவானாலும் இரண்டுமே மழைக்காலங்களுக்கு ஏற்ற அருமையான இணைகள். குழந்தைகளுக்காக மிளகை குறைத்துக் கொண்டாலும் தவறில்லை. சளித்தொல்லை, அஜீரணக் கோளாறுகள், உடல் வலி எல்லாவற்றுக்கும் நல்ல தீர்வாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.