சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இன்று (மே 24) ஆய்வு மேற்கொண்டு, சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமையமாக்க உத்தரவிட்டார்.
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பின்னர், அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி, இன்று (மே 24) எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் சிறைத் துறையின் செயல்பாடுகள் குறித்து முதற்கட்டமாக புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், சிறைக்குள் போதைப்பொருள் புழக்கத்தை அறவே ஒழிக்கும் வகையில், அவை ஊடுருவும் வழிகளை தடுப்பது குறித்தும், சிறைக்கைதிகளுக்கு கொண்டுவரப்படும் பழங்கள் போன்ற பொருள்களை சிறைக்குள்ளேயே வாங்கி வழங்கும் வகையில்
உள்வாரிச் சந்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் சிறைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை அதிகாரியுடன் இன்று ஆய்வு மேற்கொண்டோம். தமிழ்நாட்டில் மொத்தம் 13 சிறைச்சாலைகள் உள்ளன. அந்த சிறைசசாலைகளில் உள்ள தண்டனைக் கைதிகள், விசாரணை கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிறைச்சாலையில் உள்ள சமையல் கூடம், மருத்துவ வசதிகள், மருத்துவ உபகரணங்கள், குடிநீர் வசதி ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிறைச்சாலையில் பார்வையாளர்களுக்கான வசதிகள், பார்வையாளர்கள் எளிதில் வந்து செல்லும் வண்ணம் நடைமுறைகளை எளிமையாக்குதல் குறித்தும், கால அளவை தாண்டி சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் வழங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிறை கைதிகளின் மருத்துவ அறிக்கைகளை முழுமையாக நவீனப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ நடவடிக்கைகளை வழங்கிடவும், சிறைச்சாலைகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறாத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள், கூடுதலாக கண்காணிப்பு கேமரா பொருத்துதல், சிறைச்சாலையில் உள்ள ஜெனரேட்டர் வசதியை மேம்படுத்துதல், சிறைச்சாலை பதிவேடுகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு தேவையான நிதிகளை பெறுவதற்கு முதல்வரின் ஒப்புதலை பெற்று வருங்காலங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, காவல் துறை தலைமை இயக்குநர் (சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள்) கே.சங்கர், காவல் துறை தலைவர் (சிறைகள் தலைமையிடம்) ஆர்.கனகராஜ் உள்பட சிறைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Summary
Regarding the inspection conducted by the Minister for Energy and Law, C.T.R. Nirmal Kumar, at the Puzhal Central Prison in Chennai...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

6.6.1976: வெளிநாட்டிலுள்ள இந்தியர் முதலீட்டுக்குச் சலுகை - மத்திய அரசின் புது திட்டம்

கோவை மத்திய சிறையில் காவலர் மீது கைதிகள் தாக்குதல்

அரசியல் பழிவாங்கும் நோக்கில் மத்திய அமைப்புகளை பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு பேராபத்து! - ராமதாஸ் கண்டனம்








