சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது குறித்து...

News image

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! - DNS

Updated On :4 மே 2026, 8:30 am IST

புதுச்சேரியில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 6 வாக்கு எண்ணும் மையங்களுக்கு வந்துள்ள முகவர்கள், அதிகாரிகள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு செல்போன் உள்ளிட்ட சாதனங்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 91.23 சதவீத வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைக்கப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை திங்கள் காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதனைத் தொடர்ந்து 8:30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள 6 மையங்களில் இந்த தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 5,000-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மையத்திற்குள் வரும் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டுள்ளனர்; குறிப்பாக செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த பணிகள் மிகவும் துல்லியமாக நடைபெற்று வருகின்றன.

Summary

Vote counting has begun in Puducherry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.