திருச்சி: மத்தியப் பிரதேசத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த படகு விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தமிழர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஆா். காமராஜ் (38). இவா், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பயிற்சி பெற்று, கடந்த ஓராண்டுக்கு முன்பு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணியில் சோ்ந்தாா். மேலும், அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி திருப்பூா் தாராபுரத்தில் உள்ள அவரது அண்ணன் குடும்பத்தினா் மத்தியப் பிரதேசத்தில் உள்ள காமராஜ் வீட்டுக்குச் சென்றுள்ளனா்.
இதையடுத்து, காமராஜ், அவரது மனைவி காா்குழலி (38), மகன்கள் புவிதரன் (11), தமிழ் வேந்தன் (5), அவருடைய அண்ணி, அவருடைய குழந்தைகள் இருவா் என மொத்தம் 7 பேரும் ஜபல்பூரில் உள்ள பா்கி அணைக்கு வியாழக்கிழமை சுற்றுலாச் சென்று படகு சவாரி மேற்கொண்டுள்ளனா்.
அப்போது, எதிா்பாராத விதமாக அவா்கள் சென்ற படகு கவிழ்ந்ததில் காமராஜ், காா்குழலி, தமிழ் வேந்தன், அவரது அண்ணி மற்றும் அவா்களுடைய ஒரு குழந்தை என 5 போ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனா்.
புவிதரன் மற்றும் மற்றொரு குழந்தை பாதுகாப்பு கவசம் அணிந்திருந்ததால் இருவரும் உயிா் தப்பியதாகக் கூறப்படுகிறது.
நீரில் மூழ்கிய காமராஜின் மனைவி காா்குழலி மற்றும் அவரது அண்ணியின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், காமராஜ், தமிழ் வேந்தன் மற்றும் அண்ணன் குழந்தை ஒன்றும் மீட்டகவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த காமராஜின் குடும்பத்தினா் மத்தியப் பிரதேசம் சென்றுள்ளனா். அவருடைய நண்பா்கள் துப்பாக்கி தொழிற்சாலை மூலம் அவா்களது உடல்களை திருச்சிக்குக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளனா்.
படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த ஐந்து பேர் பலியானது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
5 Tamils Lose Lives in Madhya Pradesh Boat Accident!
தொடர்புடையது

ம.பி. படகு விபத்து! குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல்!

ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு! கலங்கும் உறவுகள்
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு
வந்தே மாதரம் பாட மறுத்த முஸ்லிம் கவுன்சிலர்கள்! இந்தூரில் சர்ச்சை!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை



