புது தில்லி: தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, வலி நிவாரணிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளிட்ட சுமார் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் ஏப்ரல் 1 முதல் 0.65% சதவீதம் உயரவுள்ளன. மூலப்பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட மருந்து வகைகளின் அதிகபட்ச சில்லறை விலையில் (எம்ஆர்பி) ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு ஒரு வழக்கமான செயல்முறையாகும்.
இதற்கும் ஈரான் மற்றும் அமெரிக்கா- இஸ்ரேல் போருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்திய மருந்துத் தொழில் கூட்டமைப்பின் ஆலோசகர் வினோத் கலானி தெரிவித்துள்ளார்.
ரசாயனம் மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட மருந்துக் கலவைகளின் அதிகபட்ச சில்லறை விலையை உற்பத்தியாளர்கள், அரசின் முன் அனுமதி பெறாமல் அதிகரிக்கலாம் என்று ஒரு தெரிவித்துள்ளது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வழங்கிய மொத்த விலைக் குறியீட்டு தரவுகளின் அடிப்படையில், 2024 இல் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2025 இல் ஆம் ஆண்டில் மொத்த விலைக் குறியீட்டில் ஏற்பட்ட ஆண்டு மாற்றம் (+)0.64956% ஆகும்.
அந்த அறிவிப்பின்படி, வலி நிவாரணிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளிட்ட சுமார் 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு ஏப்ரல் 1 முதல் 0.65% ஆக இருக்கும் என்றும், அதிகபட்ச சில்லறை விலையை அதிகரிக்க உற்பத்தியாளருக்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை.
தற்போதைய நிலவரம் குறித்து மத்திய அரசு நன்கு அறிந்திருப்பதாகவும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக கூறிய கலானி, இந்த விலை உயர்வு 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளது என்றார்.
மேலும், மேற்காசிய மோதல்களின் தாக்கங்களை கையாள்வதற்காக ஏழு அதிகாரம் அளிக்கப்பட்ட குழுக்களை அமைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த நெருக்கடிகளைத் தடுப்பதற்காக 'டீம் இந்தியா' அணுகுமுறையில் மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்படுமாறு அவர் வலியுறுத்தினார்.
இந்திய அதிகாரம் அளிக்கப்பட்ட குழுக்கள் போரின் விளைவுகளை கைளாள்வதோடு, எரிபொருள், எரிவாயு, உரங்கள், பணவீக்கம், சந்தைகள் பாதிக்கப்படாத வகையில் உத்திகளை வகுத்து பிரச்னைகளை நிச்சயமாகத் தீர்க்கும் என்றும் கலானி கூறினார்.
இருப்பினும், மருந்துகளின் விலை உயர்வுக்கும், தற்போது நடைபெற்று வரும் மேற்காசி மோதலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Summary
This increase in the maximum retail price (MRP) of scheduled formulations included in the National List of Essential Medicines is a routine process. It does not have any connection with the Iran and Israel-US war,” told Vinod Kalani
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை வாக்காளர்கள் கவனத்திற்கு! ஏப்ரல் 16 முதல் தபால் வாக்குப்பதிவு

வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு!

தமிழ்நாடு சுங்கச்சாவடிகளில் ஏப். 1 முதல் கட்டண உயர்வு!

ஃபாஸ்டேக் ஆண்டுக் கட்டணம் உயர்வு! ஏப்ரல் 1 முதல் அமல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


