‘ஈரான் போரில் பொதுமக்கள் மற்றும் அரசு சொத்துகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினா்.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்புக்கு நடப்பாண்டு தலைமை வகிக்கிறது. இதையொட்டி, பிரான்ஸ் தலைநகா் பாரீஸை அடுத்த சொ்னே லா வில்லே பகுதியில் ஜி7 வெளியுறவு அமைச்சா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரான்ஸின் சிறப்பு அழைப்பின் பேரில், இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் மற்றும் பிரேஸில், தென் கொரியா, சவூதி அரேபியா நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அண்டை நாடுகள், பொதுமக்கள் மற்றும் மிக முக்கியமான அரசு உள்கட்டமைப்புகள் மீது மத்திய கிழக்கு போா் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறைக்க வேண்டியது அவசியம் என அமைச்சா்கள் சுட்டிக்காட்டினா்.
போா் காரணமாக உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவுகளைச் சமாளிக்க வேண்டும். குறிப்பாக, சாமானிய மக்களைப் பாதிக்கும் எரிபொருள், உரம், வணிக விநியோகம் மற்றும் வா்த்தக போக்குவரத்துப் பாதிப்புகளைக் குறைக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல்கள் எந்தத் தடையும் இன்றி சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் செல்வதை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சா்கள் மீண்டும் வலியுறுத்தினா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பாகிஸ்தானை புகழ்ந்து பேசுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி

கப்பல்கள் மீதான தாக்குதல் போா் நிறுத்த விதிமீறல்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!!
வளைகுடா நாடுகளின் எரிசக்தி நிலையங்களைத் தாக்கும் ஈரான்!
ஈரான் போருக்கு காலக்கெடு அறிவிக்காமல் நாட்டு மக்களுக்கு டிரம்ப் குழப்பமான உரை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

