மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல்!

திருப்பூரில் முறையான அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்களை பறிமுதல் குறித்து...

News image

திருப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல்

Updated On :27 மார்ச் 2026, 3:31 am

திருப்பூர்: திருப்பூரில் முறையான அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் சாமுண்டிபுரம் அருகே தாய் மூகாம்பிகை நகரில் முறையான அனுமதியின்றி சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட வழங்கல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சரவணன், குடிமைப்பொருள் (வடக்கு) தனி வட்டாட்சியர் ராகவி தலைமையிலான அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் முறையான அனுமதியின்றி 200-க்கும் மேற்பட்ட வணிக மற்றும் வீட்டு சமையல் எரிவாயு உருளைகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், மேற்கண்ட சிலிண்டர்கள் விநாயகா கேஸ் ஏஜென்சிக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களை பறிமுதல் செய்து ஏஜென்சியின் உரிமையாளர் மோகன் என்பவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலிண்டர்கள் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் 200-க்கு மேற்பட்ட சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Summary

Authorities are investigating after seizing more than 200 domestic cooking gas cylinders that were stored without proper permits in Tiruppur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.