புதுதில்லி: அமெரிக்க-இஸ்ரேல், ஈரான் போர் எதிரொலி காரணமாக, இந்திய விமான நிறுவனங்களின் கோடைக்கால அட்டவணையில் உள்நாட்டு விமான சேவையை 10 சதவீதம் குறைத்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.
இதனால் 2025- இல் கோடைக்காலத்தில் வாரத்திற்கு 25,610-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில், வரவிருக்கும் கோடைக்கால அட்டவணையில் இந்திய விமான நிறுவனங்கள் சுமார் 10 சதவீதத்துக்கும் குறைவான உள்நாட்டு விமான சேவைகளை இயக்கும் என்றும், வாராந்திர சேவைகள் 23,049-க்கும் சற்று அதிகமாக குறையும் என்றும் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் வெளியிடப்பட்ட இந்த அட்டவணை, மார்ச் 29 முதல் அக்டோபர் 24 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஃப்ளை91, ஸ்பைஸ்ஜெட், அலையன்ஸ் ஏர், அகாசா ஏர், ஸ்டார் ஏர் மற்றும் இந்தியாஒன் ஏர் உள்ளிட்ட ஒன்பது திட்டமிடப்பட்ட விமான நிறுவனங்களை உள்ளடக்கிச் செயல்படுத்தப்படும்.
இதற்கு மாறாக, 2025 அக்டோபர் 26 முதல் 2026 மார்ச் 28 வரையிலான தற்போதைய குளிர்கால அட்டவணையின் போது, விமான நிறுவனங்கள் வாரத்திற்கு 26,495 விமானங்களை இயக்கத் திட்டமிடப்பட்டிருந்தன. இருப்பினும், டிசம்பரில் இண்டிகோவில் ஏற்பட்ட இடையூறு, அந்த விமான நிறுவனத்தின் குளிர்காலச் செயல்பாடுகளை 10% குறைப்பதற்கான நடவடிக்கைக்கு ஆளானது.
பிப்ரவரி 28 போர் தொடங்குவதற்கு முன்பே தற்போதைய அட்டவணை பெரும்பாலும் இறுதி செய்யப்பட்டதாக விமான நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், நிலைமை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பொறுத்து மேலும் குறைப்புகள் ஏற்படக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏப்ரல் மாதத்தில் நாள்தோறும் சுமார் 2,000 உள்நாட்டு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக இண்டிகோ கூறியுள்ளது. இருப்பினும், மேற்கு ஆசியாவின் நிலைமை மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் மற்றும் அந்நிய செலாவணி செலவுகள் காரணமாக அதன் சர்வதேச செயல்பாடுகள் மாறுபடலாம் என தெரிவித்துள்ளது.
விமான சேவை குறைப்புக்கு காரணம்?
அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெறும் பேரால் மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் நிச்சயமற்ற தன்மை இந்திய விமான நிறுவனங்களின் செயல்பாடுகளை நேரடியாகப் பாதித்துள்ளன. போர் பதற்றம் காரணமாக பல வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, விமானப் பாதைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால் விமானங்கள் நீண்ட தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. விமான நிறுவனங்களுக்கு கூடுதல் எரிபொருள் பயன்பாடு மற்றும் பயண நேரமும் அதிகரித்துள்ளது. மேலும், இந்த மோதல் சர்வதேச செயல்பாடுகளை சீர்குலைத்துடன், செயல்பாட்டுச் சவால்களையும் அதிகரித்துள்ளது. இதனால் பயணிகளுடன் விமான டிக்கெட்டுடன் கூடுதலாக எரிபொருள் கட்டணத்தையும் வசூலித்தாலும், அது சிறிய அளவிலான செலவையே சரிசெய்வதாக விமான நிறுவனங்கள் கூறுகின்றன.
இந்தியாவின் சர்வதேச பயணிகள் போக்குவரத்து பெரும்பாலும் மேற்காசிய நாடுகளைச் சேர்ந்தது என்பதால் அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பேர் பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்திய விமான நிறுவனங்களின் கோடைக்கால விமான சேவைகளை 10% குறைக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் விமான நிறுவனங்களின் எரிபொருள் செலவுகள் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலைமை, இந்திய விமானப் பங்குச் சந்தையில் சரிவை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு மோதல் தொடர்ந்தால், எண்ணெய் விலை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மேலும் பல விமானக் குறைப்புகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
Summary
Indian airlines will operate around 10% fewer domestic flights in the upcoming summer schedule, with weekly services expected to drop to jus over 23,000, according to the aviation regulator.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குமரகுரு கல்லூரியில் இந்திய விமானப் படை கண்காட்சி வாகனம்

மேற்காசிய பதற்றம்: இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட இந்திய விமான சேவைகள் ரத்து!

போர் காரணமாக மாற்றுப் பாதையில் விமானங்களை இயக்க இந்திய விமானத் துறை அறிவுறுத்தல்!

போர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



