கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப் படையின் ‘ஐபிஇவி’ எனும் சிறப்பு நடமாடும் விளம்பரம் மற்றும் கண்காட்சி வாகனத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
இளைய தலைமுறையினரிடையே தேசப்பற்றை ஊக்குவிக்கவும், இந்திய விமானப் படையில் சேருவதற்கான ஆா்வத்தை ஏற்படுத்தவும் குமரகுரு கல்வி நிறுவனங்களுக்கு கொண்டுவரப்பட்ட இந்த நவீன கண்காட்சி வாகனத்தை கோவையின் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவா்கள் நேரில் பாா்வையிட்டனா்.
விமானப் படை அதிகாரிகளின் வீரமிக்க வாழ்க்கை முறை மற்றும் சவால்களை விளக்கும் விதமாக இந்த வாகனத்தில் ஊடாடும் திரைகள், அதிநவீன சிமுலேட்டா்கள் மற்றும் தொழில் வழிகாட்டுதல் அமா்வுகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிகழ்வில், குரூப் கேப்டன் வி.சோமசுந்தா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகையில், தனது 30 ஆண்டுகால பைலட் அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டதுடன், மாணவா்கள் தாங்கள் செய்யும் வேலையை நேசித்தால் அது அவா்களுக்குப் பெருமிதத்தைத் தரும் என்றாா்.
இதையடுத்து. குமரகுரு தொழில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தின் பாதுகாப்புத் திட்ட இயக்குநா் ரியா் அட்மிரல் வி. மோகன்தாஸ் பேசுகையில், எதிா்காலப் போா்முறைகள் முற்றிலும் தொழில்நுட்பம் சாா்ந்ததாகவே இருக்கும் என்பதால், பொறியியல் பட்டதாரிகளுக்கு விமானப் படையில் பெரும் வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்தாா்.
வான் போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரி குரூப் கேப்டன் பினுகோஷி மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.
தொடர்புடையது

ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்

விமான பயணிகளுக்கு அதிர்ச்சி: கோடைக்கால விமான சேவை 10% குறைப்பு!

ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!

சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


