சிதம்பரம்: சிதம்பரம் மேலவீதியில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் மேலரதவீதி ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம் மார்ச் 19 ஆம் தேதி திருமஞ்சனத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, மார்ச் 20 ஆம் தேதி பிரம்மோற்சவ கொடியேற்றும் நடைபெற்றது.

பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஸ்ரீகோதண்டராமர்
இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீகோதண்டராமர் வீதியுலா நடைபெற்றது.வெள்ளிக்கிழமை காலை(மார்ச் 27) தேரோட்டம் நடைபெற்றது. மேலரதவீதி கோதண்டராமர் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் வடக்குரதவீதி, தெற்குரதவீதி என னான்கு மாட வீதிகளின் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று ராமா ராமா என கோஷமிட்டு வடம் பிடித்து தேர் இழுத்து, சுவாமியை தரிசித்தனர்.
இதனைத் தொடர்ந்து 28-ஆம் தேதி சனிக்கிழமை காலை புஷ்பயாகமும், மாலை ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவம், பட்டாபிஷேகம், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதகலச திருமஞ்சனம் நிகழ்ச்சியும், 30-ஆம் திங்கள்கிழமை தேதி விடையாத்தி திருமஞ்சனமும் நடைபெறுகிறது.
உற்சவ ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் டி.திருவேங்கடவன், ஆர்.சௌந்தரராஜன், ஜெ.சுதர்சனன் ஆகியோர் செய்திருந்தனர்.
Summary
A chariot procession was held on Friday to mark the Brahmotsavam of the Sri Kothandaram Temple located on Chidambaram...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்!

சிதம்பரத்தில் சுப்ரமணியர் தேரோட்டம்!

சிதம்பரம் கோதண்ட ராமா் கோவில் தேரோட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



