ஈரான் தலைநகர் தெஹ்ரானில் திங்கள்கிழமை அதிகாலையில் ‘முன்னெப்போதும் இல்லாத வெடிப்புச் சப்தங்கள்’ கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
அணு ஆயுதக் கொள்கைகளைக் கைவிடக் கோரி ஜெனீவாவில் பேச்சுவார்த்தையுடன் தொடங்கி பிரச்னை போராக உருவான நிலையில், கடந்த பிப். 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் சேர்ந்து நடத்திய கூட்டுத்தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவரும் மதகுருவுமான அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அதன்பின்னர், வளைகுடா நாடுகள் மீது ஈரானும், ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேஸ் மாறி மாறி தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன.
ராணுவ முகாம்கள், எரிசக்தி கட்டமைப்புகள் மட்டுமின்றி குடிநீர் நிலையங்கள், பொதுமக்களின் குடியிருப்புகள் மீதும் இருதரப்பும் தாக்குதல்களை நடத்தி வருவதால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றன.
ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள அந்நாட்டின் அனுசக்தி மையம் மீது சனிக்கிழமை தீடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக இஸ்ரேஸ் அணு ஆராய்ச்சி மையம் இருக்கும் பகுதி அருகே ஈரான் ஏவுகனைகளை வீசி சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலால் இஸ்ரேலில் பெரும் பதற்றம் நிலவியது.
‘முன்னெப்போதும் இல்லாத வெடிப்புச் சப்தங்கள்’
இந்த நிலையில், ஈரானின் கிழக்கு தெஹ்ரானில் திங்கள்கிழமை அதிகாலையில் ‘முன்னெப்போதும் இல்லாத வெடிப்புச் சப்தங்கள்’ கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது, யுத்தம் புதிய கட்டத்தை நோக்கி நகர்ந்திருப்பதாக அறிவித்துள்ளது.
தெஹ்ரானில் வெடிப்புச் சத்தம் கேட்டது என உள்ளூர் ஊடகமான மெஹ்ர் டெலிகிராமில் பதிவிட்டுள்ளது. அதே நேரத்தில், ஈரானிய தலைநகரின் ஐந்து பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், "பயங்கரமான வெடிப்புச் சப்தங்கள் கேட்கப்பட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், சேதத்தின் அளவு மற்றும் உயிரிழப்புகள் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என பதிவிட்டுள்ளது.
இஸ்ரேலின் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தெஹ்ரானில் உள்ள ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் உள்கட்டமைப்புகளைக் ‘குறிவைத்து ஒரு பரந்த அளவிலான தாக்குதல்களை’நடத்தவிருப்பதாக" அறிவித்துள்ளது.
ஈரான் தலைநகர் முழுவதும் சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
Summary
The Israeli military has issued a statement announcing a “wave of extensive strikes targeting” Iran government infrastructure in Tehran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் போரில் இதுவரை 3,300 பேர் பலி!

ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


