மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு! இலவசங்கள் இல்லை!

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடயிருப்பது குறித்து...

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :18 மார்ச் 2026, 10:50 am

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை(மார்ச் 18) வெளியிடவுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நாளை காலை 10 மணிக்கு தேர்தல் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் நாம் தமிழர் கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள 23 தொகுதிகளிலும், காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் சேர்த்து 28 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை சீமான் முன்னதாக அறிவித்திருந்தார்.

சொந்த மண்ணிலிருந்து குரல் கொடுக்கவே வருகிற சட்டபேரவைத் தேர்தலில் காரைக்குடித் தொகுதியில் போட்டியிடப்போவதாக சீமான் தெரிவித்திருந்தார்.

மேலும், “நாங்கள் தேர்தல் அறிக்கை வெளியிட மாட்டோம். எங்களது ஆட்சி எப்படி இருக்கக் போகிறது என்பதற்கான செயல்முறையைத்தான் வெளியிடுவோம்” என்று சீமான் தெரிவித்திருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை மீது மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாழ் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இருக்காது எனவும் விவசாயத் துறை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்த முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

The party's chief coordinator, Seeman, will release the election manifesto of the Naam Tamilar Party tomorrow (March 18).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.