மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் அதிகாரி கைது!

கோவை புதூர் 4 ஆவது போலீஸ் பட்டாலியன் படைப் பிரிவில் பணி புரிந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் அதிகாரி செந்தில்குமார் கைது குறித்து...

News image

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல் அதிகாரி செந்தில்குமார் - டிஎன்எஸ்

Updated On :15 மார்ச் 2026, 4:49 am

கோவை புதூர் 4 ஆவது போலீஸ் பட்டாலியன் படைப் பிரிவில் பணி புரிந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் அதிகாரி செந்தில்குமார் கைது செய்யப்பட்டார்.

கோவை புதூர் பகுதியில் தமிழ்நாடு 4 ஆவது பட்டாலியன் படைப் பிரிவு உள்ளது. இதில் கமாண்டராக (காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்து) செந்தில்குமார் பணியாற்றி வந்தார். இவர் அங்கு பணி செய்யும் பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு பல்வேறு பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி பேசி வந்துள்ளார். இது தொடர்பான புகார்கள் காவல் உயரதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது.

Story image

இதனைத் தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் போத்தனூரில் உள்ள கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவலர் பத்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவலர்கள் எஸ்.பி. செந்தில்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலியல் புகாரில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Summary

Police officer Senthilkumar was arrested for sexually harassing a female constable working at the 4th Police Battalion in Puttur, Coimbatore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.