தில்லியில் வேகமாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்து பல வாகனங்கள் மீது மோதியதில் இருவர் பலியாகியுள்ளனர்.
தில்லியின் நிஹால் விஹாரில் திங்கள்கிழமை (மார்ச் 9) வேகமாக வந்த அரசுப் பேருந்து, சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது மோதியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நஜாப்கர் பகுதியிலிருந்து வந்த அந்த அரசுப் பேருந்து, நஜாப்கர் - நங்லோய் சாலையில் ஒரு ஸ்கூட்டர், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு ஹேண்ட்ரிக்க்ஷா மற்றும் அங்கு நடந்து சென்ற மக்கள் மீது மோதியதாகவும் காலை 9.45 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்திய ஒரு குழுவினர், ஆத்திரமடைந்து சம்பவத்திற்குக் காரணமான பேருந்தைச் சேதப்படுத்தியதோடு, மற்றொரு அரசுப் பேருந்தையும் தீயிட்டுக் கொளுத்தினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இந்த விபத்து தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுபற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.
Summary
Two killed in speeding DTC bus collision in Delhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி: ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!

தில்லியில் ரூ.400 தொடர்பான தகராறில் இளைஞர் கொலை: 3 சிறுவர்கள் கைது

எதிரே வந்த மினி வேன், பைக் மீது மோதிய அரசுப் பேருந்து! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: ஒருவர் பலி, 36 பேர் காயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



