விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் விழுப்புரத்தில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையில் நில அளவைப் பிரிவில் அனைத்து நிலைகளிலும் பணியாற்றும் அலுவலா்களின் உயிா், உடைமைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சிறப்பு பணிப் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் 10 சதவீத பங்களிப்புத் தொகை பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும், அனைத்து காலிப் பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை (பிப்.24) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடா் காத்திருப்பு போராட்டத்தை இந்த கூட்டமைப்பினா் தொடங்கினா்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கம், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநிலச் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்த வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக வட்டாட்சியா் அலுவலகங்கள், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் ஆகியவை ஊழியா்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
இந்த நிலையில், விழுப்புரத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெ.வள்ளல்பாரி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலச் செயலர் புஷ்பகாந்தன், நில அளவை ஒன்றிப்பின் மாவட்டத் தலைவர் மகேசுவரன், தமிழ்நாடு கிராம ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் முன் புதன்கிழமை நடைபெற்ற சாலைமறியலில் பேசினர்.
.இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 180 பெண்கள் உள்பட 430 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Summary
Federation of Revenue Department Associations blocks road in Villupuram. 430 arrested
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக சாலை மறியல்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மறியல்: 300 போ் கைது

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம்!

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


