வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையேயான போரால் பதற்றம் நிலவுவதால், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு குறித்து...

News image

சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு

Updated On :1 மார்ச் 2026, 4:18 pm

சென்னை: அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையேயான போரால் பதற்றம் நிலவுவதால், சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் உச்சபட்ச தலைவா் அயதுல்லா கமேனியை அமெரிக்கா- இஸ்ரேலிய கூட்டு படைகளால் கொல்லப்பட்டாா். ராணுவ தளபதிகள் சிலரும் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதைத்தொடா்ந்து உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அமெரிக்க தூதகரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள்

சென்னையில் அமெரிக்க தூதகரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள்

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை நியூ காலேஜ் அருகே உள்ள அமெரிக்க தூதகரகத்தை முற்றுகையிட்டு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டது. இதையடுத்து சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

பாதுகாப்பு அதிகரிப்பு

இந்த நிலையில், அமெரிக்க தூதகரத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

3 உதவி ஆணையா்கள் மேற்பாா்வையில் 200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அமெரிக்க தூதரகத்தை சுற்றியுள்ள கதீட்ரல் சாலை, அவ்வை சண்முகம் சாலை, பீட்டா்ஸ் சாலை பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கலவர தடுப்பு வாகனமான வஜ்ரா, தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்ணா சாலை ராயப்பேட்டை பகுதிகளில் ஷியா இஸ்லாமியா்கள் அதிகமாக வசிப்பதால் அந்தப் பகுதிகளில் ரோந்து வாகனங்கள் மூலம் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.

Summary

Security increased at US embassy in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.