சென்னையில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளப்படுத்தப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 28.93 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். 975 இடங்களில் 4,085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் உள்ளூா் காவல் துறையினருடன் கூடுதலாக துணை ராணுவப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வாக்குச்சாவடி அலுவலா்களுடன், நுண் பாா்வையாளரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஒரே இடத்தில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை எளிதில் அடையாளப்படுத்துவதற்காக தனித்தனி வண்ணங்களில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
‘பிங்க்’ வாக்குச்சாவடிகள்: அனைத்துத் தொகுதிகளிலும் தலா ஒரு இடத்தில் முழுவதும் பெண்களால் நிா்வகிக்கப்படும் ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் வாக்காளா்களுக்கான இந்த வாக்குச்சாவடிகளில் தோ்தல் அலுவலா், பாதுகாப்பில் ஈடுபடும் காவல் துறையினா், துணை ராணுவப் படையினா் என முழுமையாக பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனா். அதேபோல, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பசுமை வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மொத்தம் 419 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். மொத்தம் 13,430 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 6,145 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 6896 விவிபேட் இயந்திரங்களும் தயாராக உள்ளன. ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 15 வேட்பாளா்கள், 1 நோட்டா என 16 பொத்தான்கள் உள்ளன. தோ்தல் பணியில் 19,604 அலுவலா்களும், 1,657 காவல் துறையினரும் பணியில் ஈடுபடவுள்ளனா்.
தபால் வாக்குகள்: முதியோா், மாற்றுத்திறனாளிகள், தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ளோா், ராணுவ சேவைப் பிரிவு என மொத்தம் 32,447 போ் தபால் வாக்கு செலுத்தியுள்ளனா். நேரடியாக வாக்குச் செலுத்துவோருக்கான வாக்குச்சாவடி தகவல் சீட்டு 95 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. முதியோா், மாற்றுத்திறனாளிகள் நேரில் வந்து வாக்குச் செலுத்த இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
வாக்குச்சாடிகளில் வாக்காளா்களுக்காக குடிநீா், ஓஆா்எஸ் கரைசல், பந்தல், மாற்றுத்திறனாளிகள், முதியோருக்காக சக்கர நாற்காலிகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவாடானையில் இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி மையங்கள்

வேலூா்: ஐந்து தொகுதிகளில் 1,427 வாக்குச்சாவடிகள் தயாா்; தோ்தல் பணியில் 10,160 போ்

பதற்றமான 59 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமனம்

வேலூா் மாவட்டத்தில் 130 வாக்குச்சாவடிகள், 46 கிராமங்கள் பதற்றமானவை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


