ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் வளைகுடா நாடுகளில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கில் ஈரான் நாட்டின் நிலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு கடுமையான போர் மூண்டிருக்கிறது. ஈரான் மீதான தாக்குதல் அந்த நாட்டில் மட்டுமின்றி அருகிலுள்ள வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதால் அங்கு வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், கத்தார், பஹ்ரைன், குவைத், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பும் அடுத்தடுத்து பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பதால் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஐக்கிய அரபு அமிரகத்தில் 40 லட்சம் பேர், சவுதி அரேபியாவில் 28 லட்சம் பேர் உள்பட வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறது. வளைகுடா நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்களும் உள்ளனர். ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரால் வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டிருப்பதால் இந்தியர்களை மீட்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இத்தகைய சூழலில் போர்க்காலங்களில் சாத்தியமாகும் வழிமுறைகளை பின்பற்றி வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி வளைகுடா நாடுகளின் அரசுகளை இந்தியா கேட்டுக்கொள்ள வேண்டும். போர் நடைபெறும் பகுதிகளில் அந்த நாட்டு அரசு மற்றும் பாதுகாப்பு அமைப்பினரால் வழங்கப்படும் ஆலோசனைகளை கடைபிடித்து இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
உலகில் எந்த சிக்கலுக்கும் போர் தீர்வல்ல என்பதும், போரால் ஏற்படும் நன்மைகளை விட அழிவுகளே அதிகம் என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், போரை கைவிட்டு அமைதிப் பேச்சுகளின் மூலம் அணு ஆயுத தயாரிப்பு சிக்கலுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட நாடுகள் முன்வர வேண்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Summary
Safety of Indians in Gulf countries must be ensured pmk Anbumani Ramadoss...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வளைகுடா நாடுகளில் இருந்து 8.15 லட்சம் பேர் இந்தியா வந்துள்ளனர்! - மத்திய அரசு அறிவிப்பு!

பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்: சௌமியா அன்புமணி

அமீரக நாடுகளில் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: துரை வைகோ எம்.பி.

வளைகுடா நாடுகளில் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



