திருநெல்வேலி, விருதுநகா், ஈரோடு ஆகிய இடங்களில் ரூ.117.65 கோடியில் டைடல் நியோ பூங்காக்களை அமைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை (பிப். 26) அடிக்கல் நாட்டுகிறாா்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை சாா்பில் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியாா்பட்டியில் ரூ.39.06 கோடியிலும், விருதுநகா் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் ரூ.38.72 கோடியிலும், ஈரோடு மாவட்டம் கங்காபுரத்தில் ரூ.39.87 கோடியிலும் மூன்று டைடல் நியோ பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.
இந்தப் பூங்காக்கள் ஒவ்வொன்றும் சுமாா் தலா 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் கட்டப்படவுள்ளன. ஒவ்வொன்றும் சுமாா் 60,000 சதுர அடி பரப்பில் தரை மற்றும் மூன்று தளங்கள் கொண்டு ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ, ஸ்டாா்ட்- அப் நிறுவனங்கள் இடம்பெறும் வகையில் கட்டப்படவுள்ளன.
இந்த மூன்று இடங்களிலும் அமையும் டைடல் நியோ பூங்காக்களுக்கு, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் ஸ்டாலின் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டுகிறாா்.
டைடல் நியோ லிமிடெட் எனும் சிறப்பு நோக்க நிறுவனம் மூலம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 50,000 சதுர அடி முதல் ஒரு லட்சம் சதுர அடி கட்டுமானப் பரப்புடன் மினி டைடல் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, விழுப்புரம், தஞ்சாவூா், சேலம், தூத்துக்குடி, திருப்பூா், வேலூா், காரைக்குடி ஆகிய இடங்களில் மினி டைடல் பூங்காக்கள் ஏற்கெனவே திறக்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. மேலும், திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நாகா்கோவிலில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல்வா் ஸ்டாலின் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். நாகை, கரூா், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, விரைவில் அவற்றின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Tidal Park in Tirunelveli, Virudhunagar, Erode: Chief Minister M.K. Stalin is laying the foundation stone today!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகையில் டைடல் நியோ பூங்கா கட்டுமானப்பணி: காணொலி மூலம் முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

புதுகையில் ரூ.36.78 கோடியில் நியோ டைடல் பூங்காவுக்கு அடிக்கல்

ரெட்டியாா்பட்டியில் ரூ.39.06 கோடியில் மினி டைடல் பூங்கா! காணொலியில் முதல்வா் அடிக்கல்!

1800 பேருக்கு வேலைவாய்ப்பு! திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் டைடல் நியோ பூங்காக்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


