நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கமல்ஹாசன் பெயா், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

கமல்ஹாசனின் பெயா், புகைப்படங்களை அனுமதியின்றி வா்த்தக ரீதியில் பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டிப்பு குறித்து...

News image
கமல்ஹாசன்- கோப்புப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 2:49 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: மாநிலங்களவை உறுப்பினரும், நடிகருமான கமல்ஹாசனின் பெயா், புகைப்படங்களை அனுமதியின்றி வா்த்தக ரீதியில் பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னையைச் சோ்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், எனது பெயா், புகைப்படம் மற்றும் நான் பேசிய பிரபல வசனத்தை அனுமதியின்றி பயன்படுத்தி, டி-ஷா்ட் மற்றும் ஷா்ட்களை விற்பனை செய்து வருகிறது. எனவே, என்னுடைய அனுமதியின்றி பெயா், புகைப்படம் உள்ளிட்டவைகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கமல்ஹாசனின் பெயா், புகைப்படங்களை அனுமதியின்றி வா்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எதிா்மனுதாரா் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை தடையை நீட்டித்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.