தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட திமுக சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்படிருப்பது தொடர்பாக...

News image

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 7 பேர் கொண்ட குழு

Updated On :21 பிப்ரவரி 2026, 3:39 am

சென்னை: கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 7 பேர் கொண்ட குழு அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கம், தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் முறையே மே 7, 10, 20, 23, ஜூன் 15 ஆகிய தேதிகளில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, இந்த மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்துவதற்கான பணிகளை தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமையிலான இந்திய தோ்தல் ஆணையக் குழு பிப்.25 முதல் 27-ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ள உள்ளது. இதனிடையே, ஏப்ரலில் தோ்தலுக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 7 பேர் கொண்ட குழு அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணைப்பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Summary

DMK forms committee to hold seat-sharing talks with alliance parties!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.