/

பொது வேலைநிறுத்தம்: திருவள்ளூரில் ரயில் மறியல் ஈடுபட்டோர் கைது!

மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, தேச விரோத கொள்கைகளை கண்டித்து திருவள்ளூரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பொது வேலைநிறுத்தம் குறித்து...

News image
திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பு மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர்.
Updated On :12 பிப்ரவரி 2026, 7:22 am

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, தேச விரோத கொள்கைகளை கண்டித்து திருவள்ளூரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பொது வேலைநிறுத்தம், மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பு அனைத்து தொழிலாளர் சங்கம், ஐக்கிய விவசாய சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர் சங்கத்தினர்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர் சங்கத்தினர்.

இந்த போராட்டத்துக்கு ஏ.ஐ.சி.சி.டி.யு மாவட்டதலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார்.

அப்போது, தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்ட தொகுப்புகளை அமல்படுத்தக்கூடாது, விவசாயிகளை பாதிக்கும் விதை மசோதாவை ரத்து செய்ய வேண்டும், விவசாய தொழிலாளர்களை சீரழிக்கும் விபி.ஜி.ராம்.ஜி திட்டத்தை கைவிட வேண்டும், அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவை திரும்ப பெற வேண்டும், மின் துறையில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பு ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

இதில், ஏராளமானோர் பங்கேற்று, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட விசிக திருவள்ளூர் மண்டல செயலாளர் தளபதி சுந்தர், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து தனியார் அரங்கத்தில் சிறை வைத்தனர்.

summary

Strike, train blockade to condemn the central government's anti-worker policies. More than 100 people arrested...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.