இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினருடன் இணைந்து மாவட்டச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் - மாநில - மாவட்ட நிர்வாகிகள் - ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டு தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் மத்திய பாசிச பாஜக அரசையும் - ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என தெரிவிக்கப்பட்டுள்ளது.