இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பாஜக? - சு.வெங்கடேசன் கேள்வி
இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பாஜக? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளது தொடர்பாக...


இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பாஜக? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று இரவு (பிப்.2) ஒப்புதல் தெரிவித்தார்.
பிரதமா் மோடியுடனான நட்பு மற்றும் மரியாதை காரணமாகவும், அவா் கேட்டுக் கொண்டதன்பேரிலும் அமெரிக்கா-இந்தியா வா்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டேன். இதனால் இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
இதைத் தொடா்ந்து, அமெரிக்காவுக்கு எதிரான வரி மற்றும் வரி அல்லாத தடைகளை பூஜ்ஜியமாக குறைக்க இந்தியா முன்வரும் என எதிா்பாா்க்கிறேன்.
வலுவான இந்திய உறவு: ஏற்கெனவே, எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயா்த்த இந்தியா முடிவுசெய்துள்ள நிலையில், அமெரிக்க பொருள்கள் இறக்குமதியை மேலும் அதிகப்படுத்த பிரதமா் மோடி ஒப்புக்கொண்டாா்.
இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவுடனான எங்களது வலுவான உறவு தொடா்ந்து முன்னோக்கிச் செல்லும். இதை நானும் பிரதமா் மோடியும் இறுதி செய்கிறோம்’ என ட்ரூத் சமூக வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பாஜக?
இந்த நிலையில், இந்தியா மீதான வரி குறைப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்தார் என்பதை உறுதி செய்கிறார் அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்.
இந்திய - அமெரிக்க ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாகவே நேற்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ஆனால், அதற்கு மாறாக இந்தியா ஒப்புக்கொண்ட முடிவுகளைப் பட்டியலிடுகிறார் அமெரிக்க அதிகாரி.
இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பாஜக? என சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Has the BJP subleased India's administration to the United States? - Su. Venkatesan questions
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...