எங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!திருவண்ணாமலை: கிரிவலம் செல்ல உகந்த நேரம்!ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து2025-ல் சமூக வலைதளங்கள் மூலம் ரூ. 1.89 லட்சம் கோடி மோசடி!உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டு
/

ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 1,600 குறைந்தது!

இன்று மாலை தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக..

News image

தங்கம் விலை - கோப்புப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 11:23 am

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 29) ஒரே நாளில் மொத்தம் ரூ. 1,600 குறைந்துள்ளது.

கடந்த வாரம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் இருந்தது. 5 நாள்களில் சவரனுக்கு ரூ. 2,080 குறைந்து வெள்ளிக்கிழமை சவரன் ரூ.1,12,800-க்கு விற்பனையானது.

இதையடுத்து, வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ. 1,13,600-க்கு விற்பனையானது.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை, தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 1,13,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது

இதனைத் தொடர்ந்து, தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 1,040 குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,11,600-க்கும் கிராமுக்கு ரூ. 150 குறைந்து ரூ. 13,950-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் மீண்டும் குறைந்துள்ளது.

சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,11,200-க்கும் கிராமுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை காலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலை கிராமுக்கு ரூ. 5 குறைந்து ஒரு கிராம் ரூ. 260-க்கும் கட்டி வெள்ளி(ஒரு கிலோ) ரூ. 2.60 லட்சத்துக்கு விற்பனையாகிறது.

Summary

In Chennai, the price of ornamental gold has dropped by a total of Rs. 1,600 in a single day today (April 29).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.