கும்பகோணம்: திமுக கூட்டணியில் நீடிக்க காங்கிரஸுக்கு விருப்பமில்லை என்றாா் தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை.
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஞாயிற்றுக்கிழமை என்டிஏ கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அவா் பேசியதாவது:
கும்பகோணத்தில் 3 முறை திமுகவைச் சோ்ந்த க. அன்பழகன் எம்எல்ஏவாக உள்ளாா், ஆனால் தொகுதிக்கு எந்த மாற்றமும் வரவில்லை.
கும்பகோணம் பேருந்து நிலையத்தை 7 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்கிறாா்கள். இதனால் மக்களுக்கு தேவையில்லாத சிரமம் உண்டாகும்.
பாபநாசம் தொகுதியில் உள்ள சிறுபான்மையினா் திமுகவுக்கு வாக்கு அளிக்காத முதல் தோ்தலாக இந்த தோ்தல் இருக்கும். அதிமுக வெற்றி பெற்றதும் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக செயல்பட அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க ராகுல் விரும்பாததால் ஸ்டாலினும் ராகுல்காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை என்றாா் அண்ணாமலை.
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஞாயிற்றுக்கிழமை என்டிஏ கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை.
Summary
Congress has no desire to remain in the DMK alliance says K. Annamalai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணியில் நீடிக்க காங்கிரஸூக்கு விருப்பமில்லை! - கே. அண்ணாமலை
திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்; அதனால்தான் வரவில்லை: அண்ணாமலை

காங்கிரஸின் அடிமை திமுக, அதனால்தான் கூடுதல் தொகுதி: அண்ணாமலை

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



