தஞ்சாவூர்: Regarding AIADMK candidate Ilamathi Subramanian, who collapsed while engaged in campaigning...
திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது மயங்கி விழுந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன், வியாழக்கிழமை ஆடுதுறை, வண்ணக்குடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வெயிலின் தாக்கம் அதிகமானதால் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது பிரசார வாகனத்திற்குள் வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆடுதுறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர் மயங்கி விழுந்த செய்தி அறிந்து கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் அழகேசன், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
Regarding AIADMK candidate Ilamathi Subramanian, who collapsed while engaged in campaigning...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி.தங்கமணி வாக்கு சேகரிப்பு

பிரசாரத்தில் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்! அமைச்சர் கோவி. செழியன் நலம் விசாரிப்பு!

ஃப்ரிட்ஜ், கேஸ் சிலிண்டருடன் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

திருவிடைமருதூா் அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



