மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிரதமர் மோடி, அமித்ஷா அவசர அழைப்பு... தனி விமானத்தில் தில்லி சென்ற அண்ணாமலை!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் தில்லி புறப்பட்டு சென்றது குறித்து...

News image

அண்ணாமலை - Photo: Facebook

Updated On :8 ஏப்ரல் 2026, 4:43 am

சென்னை: காரைக்காலில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் தில்லி புறப்பட்டு சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் வரும் வியாழக்கிழமை (ஏப். 9) பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரசாரம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இந்நாளில் காரைக்கால் மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரசாரம் செய்ய பாஜக தமிழக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை ஹெலிகாப்டரில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி தளத்துக்கு வந்திறங்கினாா்.

அப்போது அங்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா், ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனா். சுமாா் 10 நிமிடம் சோதனை நடத்திவிட்டு அவா்கள் புறப்பட்டனா். சோதனை நடத்திவிட்டு நீங்கள் செல்லுங்கள், நான் பிரசாரத்திற்கு செல்கிறேன் என்று சென்றுவிட்டார்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தொகுதி பாஜக வேட்பாளா் ஜி.என்.எஸ்.ராஜசேகரனை ஆதரித்து அம்பகரத்தூா் மற்றும் திருநள்ளாறு தேரடி பகுதியில் அவா் வாக்குச் சேரிப்பில் ஈடுபட்டு வந்தார்.

பிரதமர் மோடி, அமித்ஷா அவசர அழைப்பு

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அவசர அழைப்பின் பேரில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் தில்லி புறப்பட்டு சென்றார்.

காரைக்கால் மாவட்டத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவுக்கோரி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக தமிழக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலைக்கு பாஜக தலைமையில் இருந்து அவசரமாக தில்லிக்கு வரும்படி அழைப்பு வந்துள்ளது.

இதையடுத்து அண்ணாமலை காரைக்கால் பிரசார களத்தில் இருந்து தனி ஹெலிகாப்டரில் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து தனி விமானத்தில் இரவு 7.20 மணியளவில் தில்லி புறப்பட்டு சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பின் பேரில், அண்ணாமலை தனி விமானத்தில் தில்லி புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பாஜக தலைமைக்கும், அண்ணாமலைக்கும் சுமுகமான உறவு இல்லாத நிலையில், அண்ணாமலையின் திடீர் தில்லி பயணம் தமிழக அரசியல் வட்டாரம் மற்றும் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Urgent Calls from PM Modi and Amit Shah... Annamalai Flies to Delhi on a Private Jet!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.