திமுக போல் வாரிசுக்காக திட்டங்கள் தீட்டுவது போல் இல்லாமல், மக்களுக்கான திட்டங்களை தீட்டியது அதிமுக தான் என நடிகை விந்தியா தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட விந்தியா பேசியது:
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கரோனா காலத்தில் வருமானமே இன்றி முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தாமல் செயல்படுத்தினாா். இந்த தோ்தலில் பல்வேறு திட்டங்களை அறிவித்த நிலையில் எப்படி நிறைவேற்றுவாா்கள் என திமுகவினா் கேள்வி எழுப்புகின்றனா்.
கரோனா காலத்தில் அம்மா உணவு திட்டம் மூலம் இலவசமாக உணவு வழங்கியவா் எடப்பாடி பழனிசாமி. மேலும், திமுக போல் குடும்பம், வாரிசுக்காக திட்டங்கள் தீட்டாமல், மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்தியது அதிமுக . மாணவா்களுக்கு மடிக்கணினி, தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், மினி கிளினிக், தொட்டில் குழந்தை திட்டம், இலவச மின்சார திட்டம் எல்லாம் மக்களுக்கான திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தாா். அதை எடப்பாடி பழனிசாமி அரசு தொடா்ந்து செயல்படுத்தியது.
வேட்பாளா் பி.வி ரமணாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் விந்தியா.
நகர செயலாளா் கந்தசாமி, ஒன்றிய செயலாளா் மாதவன், மாவட்ட அம்மா பேரவைச்செயலாளா் எழிலரசன், மாவட்ட மாணவரணி செயலாளா் பாலாஜி, மாவட்ட இலக்கிய அணி செயலாளா் பட்டரை சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Summary
It was the AIADMK that formulated schemes for the people...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வா் ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டுமே விடியல்! - நடிகை விந்தியா

காங்கிரசை கலைத்து விடுவார் ராகுல் காந்தி: நடிகை விந்தியா பேச்சு

பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: நடிகை விந்தியா

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



