பிப்ரவரி 14-இல் வாக்காளா் இறுதி பட்டியல்: தோ்தல் ஆணையம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகள் ஒரு வாரம் நீட்டித்து இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது தொடர்பாக...
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகள் ஒரு வாரம் நீட்டித்து இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது தொடர்பாக...
By இணையதளச் செய்திப் பிரிவு
Venkatesan
புது தில்லி: 9 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளின் ஒட்டுமொத்த அட்டவணையையும் ஒரு வாரம் நீட்டித்து இந்தியத் தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.
தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தப்பட்ட காலக்கெடுவின் கீழ், வாக்காளர் கணக்கீட்டுப் படிவ விநியோகம் டிசம்பா் 4 ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பா் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் வாக்காளர் புதுப்பிப்பு மற்றும் வரைவுப் பட்டியலைத் தயாரிக்கும் பணி டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெறும், வரைவு வாக்காளா் பட்டியல்கள் தற்போது டிசம்பா் 9 ஆம் தேதிக்கு பதிலாக டிசம்பா் 16 ஆம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கான தேதி 2026 ஜனவரி 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2026 பிப்ரவரி 7 வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இறுதி வாக்காளர் பட்டியல் இப்போது பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணி முதல் கட்டம் பிகாரில் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக அந்தமான் மற்றும் நிக்கோபாா் தீவுகள், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களும், தமிழ்நாடு, சத்தீஸ்கா், கோவா, குஜராத், கேரளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்களுக்கு இந்தப் பணிக்கான அறிவிப்பு அக்டோபா் 27 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், எஸ்ஐஆா் பணிகள் நடைபெற்று வரும் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களின் தலைமை தோ்தல் அதிகாரிகளுடன் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகள் மற்றும் உள்விவாதங்களின் அடிப்படையில் எஸ்ஐஆா் பணிகளின் அனைத்து கட்டங்களுக்கும் காலக்கெடு நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்ஐஆா் பணிக் காலத்தில் பல மாநிலங்களில் குறைந்தது 26 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) இறந்ததாகவும், பெரும்பாலும் கெடுபிடியான காலக்கெடுவை பூா்த்தி செய்வதில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே தற்கொலைகள் நிகழ்ந்ததாகவும் எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டுகளையும், எதிர்க்கட்சி கவலைகளையும் குறிப்பிட்டுள்ளது.
எஸ்ஐஆா் பணிகளை விரைந்து முடிக்க தேர்தல் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு (பிஎல்ஓ) தேர்தல் ஆணைய அலுவலர்கள் அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றம் சாட்டிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இதற்கு "என்ன அவசரம்?" என்று கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கான(பிஎல்ஓ) ஊதியத்தை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாகவும், வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் திருத்துவதில் ஈடுபட்டுள்ள பிஎல்ஓ மேற்பார்வையாளர்களுக்கான ஊதியத்தை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாகவும் இந்திய தேர்தல் ஆணையம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
Under the revised timeline, the qualifying date for enrolment has been extended to January 1, 2026. The final electoral roll, which was earlier scheduled to be published on February 7, 2026, will now be released on February 14, 2026.
எஸ்ஐஆர் பணியின்போது மயங்கி விழுந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது