நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 34,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 34,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

News image
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 34,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
Updated On :26 ஜூன் 2025, 4:53 am

DIN

பென்னாகரம்: கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து 60,000 கனஅடி உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 34,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழையானது கேரளம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அவ்விரு அணைகளிலிருந்து வியாழக்கிழமை காலை வினாடிக்கு 63,000 கனஅடி உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

புதன்கிழமை மாலை ஒகேனக்கல்லுக்கு 19,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை காலை 32,000 கனஅடியாக அதிகரித்து தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐவார் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

இதையடுத்து, தொடர்ந்து இரண்டாவது நாளாக அருவிகளில் பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை இரண்டாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கையாக பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதையை வருவாய்த் துறையினா் பூட்டினா். மேலும், கரையோரப் பகுதிகளில் வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தின் அளவுகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.