தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி இடையிலான இரு வழி தேசிய நெடுஞ்சாலை (என்.எச். 87) போக்குவரத்துக்கான பயன்பாட்டில் உள்ளது. இதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச் சாலை அமைக்க ஒப்புதல் வழங்கியது.
இத்திட்டம் பரமக்குடி, சத்திரக்குடி, அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் போன்ற விரைவான வளர்ச்சி கண்டுவரும் நகர்ப்புறங்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதுடன், இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு முக்கிய வழிபாட்டுத்தலங்களுக்கும் பொருளாதார மையங்களுக்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடி இடையே சுற்றுலாவை மேம்படுத்தவும் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை மேம்பாட்டுக்கான புதிய வாய்ப்புகளுக்கும் இத்திட்டம் உதவும். 8.4 லட்சம் நேரடி மனித வேலை நாள்களையும் 10.45 லட்சம் மறைமுக மனித வேலை நாள்களையும் இது உருவாக்கும்.
தேசிய நெடுஞ்சாலை எண் 38, 85, 36, 536, மற்றும் 32 ஆகிய ஐந்து முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளையும், 3 மாநில நெடுஞ்சாலைகள் (எண் 47, 29, 34) ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கப்பட்டு, மாநிலத்தின் தென்பகுதி முழுவதும் ஒரு முக்கிய பொருளாதார, சமூக மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான முனையங்களுக்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்கும்.
கூடுதலாக, இந்த மேம்படுத்தப்பட்ட வழித்தடமானது மதுரை, ராமேசுவரம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள், மதுரை விமான நிலையம் மற்றும் பாம்பன், ராமேசுவரம் ஆகிய சிறிய துறைமுகங்கள் ஆகியவற்றுடன் இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் பல்முனை போக்குவரத்து ஒருங்கிணைப்பை உறுதி செய்யும். இந்தப் பகுதிகள் முழுவதும் சரக்கு மற்றும் பயணிகளின் விரைவான போக்குவரத்தை எளிதாக்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
தமிழகத்துக்கு நல்ல செய்தி
இதனிடையே, நான்கு வழிச்சாலைத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதை "தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு நல்ல செய்தி!' பரமக்குடி - ராமநாதபுரம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். பொருளாதார வளர்ச்சியையும் சுற்றுலாவையும் அதிகரிக்கும்' என தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மோடிக்கு இபிஎஸ் நன்றி
இந்நிலையில், தமிழ்நாட்டின் சாலை இமைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், பரமக்குடி-ராமநாதபுரம் இடையே 46.7 கி.மீ. தூர தேசிய நெடுஞ்சாலை எண் 87-ஐ நான்கு வழிச் சாலையாக மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.
ரூ.1,853 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் இந்த வழித்தட மேம்பாட்டு திட்டமானது, பயண நேரத்தை குறைத்து, பயணப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், தென் தமிழகத்தில், குறிப்பாக ராமேஸ்வரம் புனித யாத்திரைப் பகுதியில் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை பெரிதும் ஊக்கப்படுத்தும்.
தமிழ்நாட்டின் சாலை இணைப்புத் திட்டங்களுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Summary
ADMK General Secretary Edappadi K. Palaniswami has thanked Prime Minister Narendra Modi for prioritizing road connectivity projects and economic development in Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

ராகுலுடன் சேர்ந்து கார்கேயின் மேன்மை கெடுகிறது : அமித் ஷா

புதுச்சேரி, சென்னையில் பிரதமர் மோடி ஏப்.3, 4-இல் பிரசாரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


