/

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: புதிய பாடல் அறிவிப்பு!

இன்று மாலை வெளியாகிறது ‘புள்ள’ பாடல்!

News image
Updated On :4 பிப்ரவரி 2025, 6:53 am

DIN

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் புதிய பாடல் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ், உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Story image

இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் வெளியிடுகிறது. ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் பிப். 21 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

முன்னதாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் இடம்பெற்ற ’கோல்டன் ஸ்பாரோ’, ’காதல் ஃபெயில்’, ‘ஏடி’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

இந்த நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ’புள்ள’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.