நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும் அவர்களின் குடும்ப நலனுக்காகவும் கொடிநாள் நிதியளிப்பது முதல்வர் தெரிவித்திருப்பது தொடர்பாக...

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :7 டிசம்பர் 2025, 10:33 am

இணையதளச் செய்திப் பிரிவு

தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும் அவர்களின் குடும்ப நலனுக்காகவும் கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களான நம் அனைவரின் கடமை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது கொடிநாள் செய்தியாக தெரிவித்துள்ளாா்.

இது தொடர்பாக, அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில்,

தாயகம் காக்கத் தன்னலம் மறந்து பணியாற்றும் முப்படை வீரர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆயுதப்படை கொடிநாளில் நாட்டு மக்களின் சார்பில் எனது வணக்கங்கள்!

மக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாக வாழ, உயிரைத் துச்சமாக எண்ணி, கடுமையான சூழல்களில் கண்ணுறங்காமல் காவல் காக்கும் படைவீரர்களின் பணி ஈடு இணையற்றது.

தியாகத் தீரர்களின் மறுவாழ்வுக்கும் அவர்களின் குடும்ப நலனுக்காகவும் கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களான நம் அனைவரின் கடமை! என கூறியுள்ளார்.

summary

CM Social Media Msg-Flag Day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.