‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்து...

News image
ஓடிடி- Din
Updated On :13 செப்டம்பர் 2024, 6:41 am

DIN

திரையரங்குகளில் வாரந்தோறும் படங்கள் வெளியாகுவதுபோல, ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகு தாத்தா திரைப்படம் நாளை(செப். 13) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு வழங்க, 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தை மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் நடித்து, இயக்கியுள்ளார். இப்படம் செப். 13 ஆம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

இயக்குநர் விஜய் மில்டன் கோலி சோடா ரைசிங் என்கிற இணையத் தொடரை இயக்கியுள்ளார். இத்தொடர், ஹாட்ஸ்டார் ஓடிடியில் வருகிற செப். 13 ஆம் தேதி வெளியாகிறது.

ஜித்து ஜோசஃப் - ஃபாசில் ஜோசஃப் கூட்டணியில் உருவான நுனக்குழி திரைப்படம் செப். 13 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு மொழி படங்களான ஏய் மற்றும் மிஸ்டர் பச்சன் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது. மலையாள படங்களான விஷேஷம் அமேசான் பிரைமிலும், தலைவன் சோனி லைவ் ஓடிடி தளத்திலும் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.