நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஓடிடியில் கோட்: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடி வெளியீடு குறித்து...

News image
ஓடிடி- Din
Updated On :3 அக்டோபர் 2024, 4:37 pm

DIN

ஓடிடி தளங்களில் வாரந்தோறும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகின்றன.

வாரந்தோறும் ஓடிடியில் வெளியாகும் படங்களை பார்ப்பதற்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் யோகிபாபு - கெளரி கிஷன் நடிப்பில் உருவான போட் படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணலாம்.

தெலுங்கு மொழிப்படமான நிவேதா தாமஸின் ’35 சின்ன விஷயம் இல்ல’ படத்தை ஆஹா தமிழ் ஓடிடியில் நாளை (அக். 4) பார்க்கலாம்.

நடிகை மீனா, ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவான மலையாள மொழிப்படமான அனந்தபுரம் டைரீஸ், மனோரமா மேக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

அனன்யா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் படமான CTRL படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை(அக். 4) வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.