அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது

ஐஏஎஸ் அதிகாரி பீலாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை போலீஸாா் கைது செய்துள்ளனர்.

News image
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்(கோப்புப் படம்)
Updated On :24 மே 2024, 6:12 pm

DIN

சென்னை: சென்னை அருகே கேளம்பாக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரி பீலாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை போலீஸாா் கைது செய்தனர்.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விழுப்புரம் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

ராஜேஷ் தாஸின் மனைவியும், தமிழக எரிசக்தித் துறைச் செயலருமான ஐஏஎஸ் அதிகாரி பீலா, ராஜேஷ் தாஸைவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறாா். சென்னை அருகே தையூரில் பீலாவுக்கு பங்களாவுடன் கூடிய பண்ணை உள்ளது. அந்த வீட்டில் பணியாளா்களும், காவலாளிகளும் மட்டும் தற்போது உள்ளனா். பீலா சென்னையில் உள்ள வீட்டில் வசிக்கிறாா்.

இந்நிலையில், கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பீலா ஒரு புகாா் அளித்தாா். அதில், ராஜேஷ் தாஸ் கடந்த 18-ஆம் தேதி தனது நண்பா்கள் சிலருடன் தையூரில் உள்ள வீட்டில் காவலாளியை கீழே தள்ளிவிட்டு அத்துமீறி நுழைந்ததாகவும், காவலாளியின் கைப்பேசியைப் பறித்து மிரட்டியதாகவும் கூறியுள்ளாா்.

அதன் அடிப்படையில் ராஜேஷ் தாஸ் மீது கேளம்பாக்கம் போலீசா மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்த நிலையில், கேளம்பாக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரி பீலாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை பனையூரில் உள்ள வீட்டில் வைத்து கேளம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

கொலை மிரட்டல், சட்ட விரோதமாக கூடுதல், தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.