செங்கல்பட்டு: செங்கல்பட்டில் வீட்டில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் தீயில் உடல் கருகி பலியாகினர். பலத்த தீக்காயமடைந்த குழந்தைகளின் தாய், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பெரிய மணியக்காரத் தெருவில் வசிப்பவா் வட மாநிலத்தைச் சோ்ந்த சதாம் (30). இவா், கடந்த 6 ஆண்டுகளாக ரயில் நிலையத்தில் தேநீா் விற்று வியாபாரம் செய்து வருகிறாா். வியாழக்கிழமை மாலை வழக்கம் போல், சதாம் தேநீா் வியாபாரம் செய்ய சென்றாா்.
அவரின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் வீட்டில் இருந்துள்ளனா்.
இந்த நிலையில் வீட்டில் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டிருந்ததைக் கவனிக்காமல், சதாமின் மனைவி ராஜ்கத்தோம் அடுப்பைப் பற்ற வைக்க முயன்றபோது, தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதில் ராஜ்கத்தோம், குழந்தைகளான ராஜியா பட்வின் (8), சயலி (4), அல்தாப் (1) ஆகிய 4 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனா்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் செங்கல்பட்டு நகரக் காவல் நிலையம், தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனா். அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினா், உயிருக்குப் போராடியவா்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தைகள் ராஜியா பட்வின்(7), அல்தாப்(5) ஆகிய இருவரும் வியாழக்கிழமை உயிரிழந்தனா். மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழந்தை சயலி (4) வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.
குழந்தைகள் மூவரும் உயிரிழந்த நிலையில், பலத்த தீக்காயமடைந்த தாய் ராஜ்கத்தோம் ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு நகரக் காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: பெண் பலத்த காயம்

21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு: மத்திய அரசு முடிவு

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசு!

மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



