திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

புத்தாண்டுப் பிறப்பு: என்.சி.பி.எச்.-ல் 10% - 50% சிறப்புத் தள்ளுபடி விற்பனை

புத்தாண்டுப் பிறப்பையொட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில் நூல்களுக்கு 50 சதவிகிதம் வரை சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜனவரி 2024, 5:48 am

DIN

புத்தாண்டுப் பிறப்பையொட்டி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில் நூல்களுக்கு 50 சதவிகிதம் வரை சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.

2022 ஆண்டுப் பிறப்பையொட்டி, டிசம்பர் 31, ஜன. 1, 2 ஆகிய நாள்களில் இந்தச் சிறப்பு விற்பனை நடைபெறும்.

இந்த நாள்களில் 10 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்கப்படவுள்ளதாக என்.சி.பி.எச்.  நிறுவன மேலாண் இயக்குநர் சண்முகம் சரவணன் தெரிவித்துள்ளார்.

அரசியல், அறிவியல், மொழி, கலை, இலக்கியம், தத்துவம், சிறுவர் நூல்கள், தன் முன்னேற்ற நூல்கள், மார்க்சியம் மற்றும் மெய்யியல், தொழில்நுட்பவியல், சமூகவியல் மற்றும் சோவியத் இலக்கியங்கள் எனப் பல்வேறு துறைகள் சார்ந்த பல்லாயிரக்கணக்கான நூல்கள் விற்பனையில் இடம் பெறுகின்றன.

சென்னை மற்றும் தமிழகமெங்குமுள்ள அனைத்து என்.சி.பி.எச். கிளை விற்பனையகங்களிலும்  இந்தச் சிறப்பு விற்பனை நடைபெறவுள்ளதாகவும் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.