ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கரோனா தற்காப்பில் வைட்டமின் டி? : பிரிட்டன் அறிவுரை

கரோனா கால ஊரடங்கின்போது, தேவையான அளவுக்கு வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுமாறு மக்களை பிரிட்டன் நல்வாழ்வுத் துறை கேட்டுக்கொண்டிருக்கிறது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:30 pm

ததாகத்

கரோனா கால ஊரடங்கின்போது, தேவையான அளவுக்கு வைட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுமாறு மக்களை  பிரிட்டன் நல்வாழ்வுத் துறை கேட்டுக்கொண்டிருக்கிறது.

வெய்யிலில் காய்வதன் மூலம் அல்லது உடம்பில் வெய்யில் படுவதன் மூலம் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி பெறப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பராமரிப்பதில் வைட்டமின் டி-க்குப் பங்கிருக்கிறது.

கரோனா முடக்கம் காரணமாக நாம் பெரும்பாலான நேரத்தை வீட்டுக்குள்ளேயே கழிக்க வேண்டிய நிலையிலிருப்பதால், அதை ஈடுகட்டும் வகையில் தேவையான வைட்டமின்  டி சத்தினை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய இணையதளத்தில் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருக்கிறது.

எலும்புகளும் தசைகளும் திறமாக இருக்க ஒவ்வொரு நாளும் 10 மைக்ரோ கிராம்கள் அளவுக்கு வைட்டமின் டி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அந்த அறிவுரை தெரிவிக்கிறது.

கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வைட்டமின் டி மாத்திரைகள் நோயாளிக்கு உதவியாக இருக்குமா என அறிவியலாளர்கள் ஆராய்ச்சியினைத் தொடங்கவுள்ளனர்.

ஸ்பெயினிலுள்ள கிரானாடா பல்கலைக்கழகம் ஏற்கெனவே 200 கரோனா நோயாளிகளிடம் இதுதொடர்பான பத்து வார கால ஆராய்ச்சியைத் தொடங்கிவிட்டது.

ஒருவருக்கு வைட்டமின் டி சத்துப் பற்றாக்குறையாக இருந்தால், அவருக்கு  மற்றவர்களைவிடவும் சளிப் பிடிக்க 3 அல்லது 4 மடங்கு கூடுதல் வாய்ப்பு இருக்கிறது  என்கிறார் சன்சக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜென்னா மக்கியோச்சி.

வைட்டமின் டி பற்றாக்குறையாக இருந்தால் கரோனா போன்ற சுவாசம் சார்ந்த தொற்றுகளால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவையெல்லாம் ஒருபக்கமிருந்தாலும் கரோனா வைரஸ் பாதிப்பைக் குறைப்பதில் வைட்டமின் டி மாத்திரைகளுக்குப் பங்கிருப்பதாக இதுவரை எவ்வித சான்றுமில்லை என்றும் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

Story image

பொதுவாக, நுரையீரல்களில்  நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவித்து சுவாசத் தொற்றுகளைத் தடுப்பதில் வைட்டமின் டி-க்குப் பங்கிருப்பதாகக் கருதப்படுகிறது.

வெப்ப மண்டல நாடுகளில் ஒன்றான இந்தியா போன்ற நாடுகளில் வைட்டமின் டி கிடைப்பது கடினமல்ல என்றாலும்கூட தற்போதைய ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே நடமாட இயலாமல் இருப்பதால் பலருக்கு, குறிப்பாக, வயதானவர்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை நேரிடும் ஆபத்து இருக்கிறது.  

பால், காளான், மீன், மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஆரஞ்சுப் பழச்சாறு, ஓட்ஸ் போன்றவற்றில் வைட்டமின் டி சத்து இருக்கிறது. வைட்டமின் டி குறைபாடு பிரச்சினையிலிருந்து தப்பிக்க, உணவில் இவற்றைச் சேர்த்துக்கொண்டால் உணவே மருந்தாகவும் ஆகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.