இதற்கு அத்தாட்சி மோனிகா யாதவ் என்ற இளம்பெண் அளித்த வாக்குமூலம். மத்தியப் பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற கல்லூரியொன்றில் சேர்ந்து பயில விரும்பிய மோனிகா, அதற்கான சிபாரிசுக்காக ஸ்வேதாவை அணுகியிருக்கிறார். தானாக வலையில் வந்து சிக்கிய மானை விட்டுவிட விரும்பாத ஸ்வேதா, ஆர்த்தியுடன் அப்பெண்ணை மத்தியப் பிரதேச எம் பி ஒருவரைக் காணும்படி அனுப்பியிருக்கிறார். பிரசித்தி பெற்ற கல்லூரியில் இடம் வேண்டுமென்றால் அந்த எம் பியுடன் இரவைக் கழிக்க வேண்டுமென்று மோனிகாவை இவர்கள் வற்புறுத்தியதில் அந்தப் பெண் பயந்து போய் தனக்கு படிப்பே வேண்டாம் என்று வெறுத்துப் போய் தனது சொந்த ஊருக்கே சென்று விட்டார். ஆனால், அந்தப் பெண்ணின் வறிய சூழலை நன்கறிந்து கொண்ட ஸ்வேதா கும்பல், அவளை விடாது பின் தொடர்ந்து அவளது சொந்த ஊருக்கே சென்று அவளது ஏழைத்தகப்பனிடம், உன் பெண்ணின் படிப்புச் செலவு மொத்தத்தையும் நாங்கள் நடத்தி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமே ஏற்றுக் கொள்ளும், நீ, உன் பெண்ணை எங்களுடன் அனுப்பு, நாங்கள் அவளை எங்களது சகோதரி போலப் பார்த்துக் கொள்கிறோம் என்று பலவாறாகச் சமாதானப்படுத்தி மோனிகாவை மீண்டும் தங்களை வலையில் வீழ்த்தி அவளைத் தங்களது செக்ஸ் ராக்கெட்டில் சிக்க வைத்தனர்.