ஒருவேளை குறிப்பிட்ட நபர் எழுதும் கருத்து சர்ச்சைக்குரியதாக இருந்தாலோ அல்லது மக்களை மூளைச்சலவை செய்வதைப் போல இருந்தாலோ அதில் அதிருப்தி இருக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட சமூக ஊடகங்கள் அவற்றை தங்களது தளத்திலிருந்து நீக்கலாம் அல்லது குறிப்பிட்ட அந்தப் பயனாளரின் கணக்கை முடக்கலாம். இப்படியான நடவடிக்கைகளே கடந்த காலங்களில் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், தில்லி சம்பவம் புதுமையாகவும், விநோதமாகவும் இருக்கிறது இது சமூக ஊடக தளங்களில் ஃபேஸ்புக் பயனாளர்களின் ரகசியக் காப்பு மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பதாக இருக்கிறது.