சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

இனி சாதாரண கட்டணத்தில் எல்லா நேரத்திலும் பயணம் செய்யலாம்! புதிய கால் டாக்ஸி அறிமுகம்!

தினமும் காரில் அலுவலகம் மற்றும் ஷாப்பிங் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

News image
Updated On :26 ஜூன் 2018, 11:48 am

தினமும் காரில் அலுவலகம் மற்றும் ஷாப்பிங் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் கார்ப்பரேட் நிறுவனங்களான ஓலா, மற்றும் ஊபர் உள்ளிட்ட சில சர்வதேச நிறுவனங்கள்தான். தற்போது இவர்களுக்குப் சவால் விடும் விதத்தில் களம் இறங்கியுள்ளது சென்னை ஓட்டுநர்களின் ‘ஓடிஎஸ்’ என்ற புதிய கேப் சர்வீஸ்.

ஓலா மற்றும் ஊபரில் ப்ரைம் டைம் எனப்படும் காலை அலுவலகம் செல்லும் நேரமான 8 - 10 வரை மற்றும் மாலை 5 மணியிலிருந்து 8 வரை வழக்கமான கட்டணத்தை விட பன்மடங்கு அதிகமாக பணம் வசூலிக்கப்படும். கேப் ஓட்டுநர்களிடமும் அதிகப் பணத்தை கமிஷனாக இந்நிறுவனங்கள் பிடித்துக் கொள்கின்றன. மேலும் இந்நிறுவனங்கள் ஓட்டுநர்களிடம் 20% வருமானத்தையும் ஜிஎஸ்டியையும் பிடித்து கொள்கின்றன. ஓட்டுநர்கள் இதனை எதிர்த்து சில போராட்டங்களை நிகழ்த்தினர் ஆனால் பலமிக்க கார்ப்பரேட் கம்பெனிகளை எதிர்த்து அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. கடுமையான சூழல்களால் ஓலா மற்றும் ஊபரில் தங்கள் ஓட்டுநர் உரிமத்தை விட்டுத்தர வேண்டியதாகிவிட்டது.

இந்நிலையில், அத்தகைய ஓட்டுநர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓடிஎஸ் (OTS) அதாவது ஓட்டுநர்கள் தோழர்கள் சங்கம் என்ற புதிய கால் டாக்ஸி சேவை நிறுவனத்தை தொடங்கி விட்டனர். ப்ரைம் டைம், பீக் டைம் என்று பாகுபாடு இல்லாமல் எல்லா நேரங்களிலும் சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும் என்பதுதான் இதன் ப்ளஸ் பாயிண்ட். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.