பங்களாதேஷ், டாக்கா ரயில்நிலையத்தில் இந்தியப் பெண்ணொருவர் ரயில்நிலைய கழிவறையில் குழந்தை பெற்றார். ரோக்ஷனா அக்தர் எனும் 30 வயது இந்தியப் பெண் அந்நாட்டின் தலைநகர் டாக்கா ரயில்நிலையக் கழிவறையில் குழந்தை பெற்றார். இளம்பெண், கழிவறையில் குழந்தை பெற்றதைக் கண்ட ரயில்நிலைய ஊழியர்கள் விஷயத்தை கமலாபூர் ரயில் நிலையப் பொறுப்பாளரான யாசின் ஃபாரூக்கிடம் எடுத்துச் செல்ல திங்களன்று இரவு தாயும், சேயும் உடனடியாக அருகிலிருந்த முக்தா ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அங்கிருந்து டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடம்பெயர்ந்தனர்.