2006 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்த அமைப்பின் பிரதான நோக்கமே இந்துக் கோயில்களைப் பாதுகாத்துப் பராமரிப்பது தான். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பர்யமிக்க கோயில்களை மீட்டு அவற்றின் உயர்ந்த ஒழுக்கநெறிகளையும், நெறிக்கோட்பாடுகளையும் நிலைநிறுத்துவதும், பாதுகாப்பதுமே இவ்வமைப்பின் நோக்கமாக இருந்தது. அதன் காரணமாகத்தான் தங்களது ‘ஆலயவாணி’ நெப் ரேடியோவுக்கு கேசிராஜு அலைஸ் கஜல் ஸ்ரீனிவாஸை புரோகிராம் ஹெட் ஆக நியமித்திருந்தனர். ஆனால், அவர் தனது அதிகாரத்தையும், பதவியையும் துஷ்பிரயோகம் செய்து, நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ரேடியோ ஜாக்கி ஒருவருக்கு நெடுநாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பது அதிர்ச்சிகரமான விஷயம். அதைத் தங்களால் ஒருபோதும் சகித்துக் கொள்ளவே முடியாது. எனவே எவ்வித முன்னறிவிப்பும் இன்று அவரை எங்கள் அமைப்பிலிருந்து விலக்குகிறோம் என இந்து பாரம்பர்ய அமைப்பு அறிவித்துள்ளது.