மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் இந்திய - சீன எல்லையிலுள்ள லடாக் பகுதிக்குச் சென்று அங்குள்ள ராணுவ வீரர்களை நேரில் சந்தித்துள்ளார். மிகக் கடுமையான பனி, ஊசியாய் குத்தும் குளிர் போன்ற இயற்கை சூழல்களில் பணிபுரிந்து வரும் ராணுவ வீரர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் ஏற்படுத்தும் நோக்கில் நிர்மலா சீதாராமனின் இப்பயணம் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தோய்ஸ் எனும் இந்திய-சீன எல்லைப் பகுதிக்குச் சென்ற முதல் மத்திய அமைச்சர் அவர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் உலகின் மிக உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஏர்ஃபீல்ட் என்றழைக்கப்படும் தெளலட் பெக் ஓல்டி எனும் பகுதிக்குச் சென்றுள்ளார் நிர்மலா சீதாராமன்.

அவருடைய இந்த விஜயம் குறித்து ராணுவ அமைச்சகம் கூறுகையில், நிர்மலா சீதாராமன் இந்திய - சீன எல்லையில் இருக்கும் தோய்ஸ் எனும் ராணுவப் பகுதிக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு ராணுவத்தினரின் செயல்பாடுகள் பற்றியும், எந்நேரமும் தயார் நிலையில் ராணுவப் படை இருப்பது குறித்துமான தகவல்களை விளக்கினோம் என்று கூறியது.
தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றிய நிர்மலா ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புணர்வை பாராட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


