இந்தியாவில் சென்னையில் தயாரிக்கப்பட்டிருக்கும் முதல் அதிவேக ரயிலான ட்ரெயின் 18 தனது சோதனை முயற்சியில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தை கடந்த ஞாயிறன்று நிறைவு செய்தது. 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த எஞ்சின் அற்ற அதிவிரைவு ரயிலே நாட்டின் அதிவேக ரயில்களில் முதன்மையானது என ஐசிஎஃப் ரயில்வே உயரதிகாரி தெரிவித்தார். ட்ரெயின் 18 தனது அதிவிரைவு சோதனை முயற்சியை நேற்று கோட்டா சாவாய் மாதோபூர் பிரிவில் நிறைவு செய்தது. ரயில் 18 அதிவிரைவு ரயிலுக்கான சோதனை ஓட்ட முயற்சியில் பெரும்பான்மை நிறைவு பெற்று விட்டதாகவும் இன்னும் ஒரு சில சோதனை முயற்சிகளே பாக்கியுள்ள நிலையில் இதுவரை குறிப்பிடத்தக்க வகையிலான பிரச்னைகளோ, தவறுகளோ எதுவும் நேரவில்லை... ட்ரெயின் 18 சேவைகளை மேம்படுத்தும் பணியே தற்போது நடைபெற்று வருகிறது என ட்ரெயின் 18 ஐ தயாரித்த சென்னை ஐ சி எஃப் நிறுவனத்தின் பொது மேலாளர் எஸ். மணி IANS செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.