தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி பிரச்னையில் அரசியலை புகுத்தும் பாஜக அரசின் செயற்பாட்டினை கண்டித்து தமிழகம் முழுவதும் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. போதிய நீர் இல்லையெனில் உணவு உற்பத்தியைப் பாதிக்கும். அது வாழ்வாதாரத்தையும், கூடவே ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும். மேலும், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட நாசகார திட்டங்களுக்கு தமிழகத்தையே தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் நயவஞ்சக செயல்களை எதிர்த்து மக்கள் கடுமையான போராடி வருகிறார்கள்.
ஏப்ரல் 10-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கிறது. மக்கள் போராட்டத்திலிருந்து கவனத்தை திசை திருப்பும் வண்ணம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்யுமாறு தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு - காவிரி உரிமை மீட்பு கூட்டமைப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், ஐபிஎல் நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், ஆர்.கே நகர் சட்ட மன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐபிஎல்போட்டிகளை தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது,
'காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் விவசாயிகளின் குரலுக்கு வலு சேர்க்கும் விதமாக இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்குமாறு தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
விவசாயிகளின் வேதனையில் பங்கெடுக்கும் விதமாக ஆர்ப்பாட்டம், போராட்டம் என நாள்தோறும் நடத்தி தங்கள் உணர்வுகளை மக்கள் வெளிப்படுத்திவரும் இந்த நேரத்தில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கிறது.
தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீர்ப் பிரச்சனையில் மத்திய மாநில அரசுகள் நமக்கு இழைக்கும் துரோகத்திற்கு எதிராக தமிழகமே பொங்கி எழுந்திருக்கிறது' என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மேஷம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


